டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதனடிப்படையில், முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வழங்கப்பட்டுள்ள பின்வரும் அறிவுரைகளை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கவும், அவர்களது செயல்பாட்டினைக் கண்காணித்து டெங்கு ஒழிப்பை ஒரு இயக்கமாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. அறிவுறுத்தல்களின் விவரம்: பள்ளி வகுப்பறை மற்றும் கழிவறைகளைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். குடிநீர்ப் பானை மற்றும் தண்ணீர் தொட்டிகள் மூடி வைக்கப்பட வேண்டும். பள்ளி வளாகம் மற்றும் வீடுகளில் கொசுக்கள் முட்டையிட ஏதுவாக உள்ள தேங்காய் ஓடுகள், பழைய டயர்கள், பூந்தொட்டிகள், தட்டுகள், தண்...