பள்ளி மாணவர்களுக்கு வெளிமாநில சுற்றுலா
பள்ளி மாணவர்களுக்கு வெளிமாநில சுற்றுலா அரசுப் பள்ளிகளில் சிறப்பாக படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்ல, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம்சார்பில் (ஆர்.எம்.எஸ்.ஏ.,), கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் ஊக்குவிக்க, பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதில், அரசுப் பள்ளிகளில் கணிதம், அறிவியல் பாடங்களில் சிறப்பாக படிக்கும், மீத்திறன் கொண்ட மாணவர்களை, ஊக்குவிக்கும் வகையில், கல்வி சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு, 100 பேர் வீதம், 3,200 பேர், வெளிமாநிலங்களுக்கு, இரண்டு நாட்கள் கல்வி சுற்றுலா செல்ல உள்ளனர். இவர்களின் பயணச்செலவை, ரயில்வே துறை பொறுப்பேற்கிறது. தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட செலவினங்களுக்கு, தலா 2,000 ரூபாய், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆர்.எம்.எஸ்.ஏ., உதவி திட்ட அலுவலர் கண்ணன் கூறுகையில், ''அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே, கல்வி சுற்றுலா அழைத்து செல்ல உத்தரவிடப்பட்டுள்...