ஓடும் பேருந்து, ரயில்களில் ஏறவோ இறங்கவோ வேண்டாம்: மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி துறை அறிவுரை

ஓடும் பேருந்து, ரயில்களில் ஏறவோ இறங்கவோ வேண்டாம்: மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி துறை அறிவுரை



பஸ் மற்றும் ரயில்களில் ஓடிச்சென்று ஏறவும், இறங்கவும் வேண்டாம் என்று மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

 பள்ளி மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித்திட்டம்) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதா வது:

பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பஸ்கள் மற்றும் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். அவர்களில் ஒருசில மாணவர்கள் பஸ்களிலும், ரயில்களிலும் ஓடிச்சென்று ஏறுவது, இறங்குவது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இது அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிவதால் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் தலைமை ஆசிரியர்கள் மூலமாக முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Comments

Popular posts from this blog

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்