செங்கல் விலை சூடுபிடிக்குது
பேரையூர்;பேரையூரில் சில நாட்களுக்கு முன் 3.30 ரூபாய்க்கு விற்ற ஒரு செங்கல் தற்போது 4 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.சாப்டூர், பேரையூர், தும்மநாயக்கன்பட்டி, சிலைமலைப்பட்டி, டி.கிருஷ்ணாபுரம், எம்.கல்லுப்பட்டி, எழுமலை, சூலப்புரம் உட்பட 500க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. சில மாதங்களாக மூலப் பொருட்களான மண், விறகு, விலை பல மடங்கு உயர்ந்துள்ளன.300 ரூபாய்க்கு விற்ற ஒரு யூனிட் மண் தற்போது 1200 ரூபாய்க்கும், 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற ஒரு டன் விறகு 3 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கட்டுமான தொழில்கள் பாதித்ததால் செங்கல் விற்பனை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் செங்கல் சூளைகளில் லட்சக்கணக்கான கற்கள் தயாரிக்கப்பட்டு விற்பனையாகாமல் தேங்கின. தற்போது செங்கல் 4 ரூபாய்க்கு விற்பனை ஆவதால் செங்கல் சூளைகளில் உற்பத்தி சூடுப்பிடித்துள்ளது.
Comments
Post a Comment