தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 அல்லது தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 (Right to Information Act, சட்டம் இல. 22/2005) இந்தியநாடாளுமன்றத்தால் அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக்க உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். இச்சட்டம் டிசம்பர் மாதம் 2004,[1] ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மே 11, 2005,[1]மக்களவையிலும், மே 12, 2005,[1] ஆம் ஆண்டு மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. ஜூன் 15 2005 குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. ஜூன் 21, 2005, அரசுப் பதிவிதழில் வெளியிடப்பட்டு அக்டோபர் 12,2005 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது.இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவின் பிறப் பகுதிகள் அனைத்திற்கும் பொருந்தும். இதன்படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்/மகளும் தகவல் பெறும் உரிமை பெற்றவர்கள்.
Comments
Post a Comment