குயவனின் கை வண்ணம்

குயவனின் கை வண்ணம் ஊருக்கு வெளியே குயவர் குடி வாழ்க்கை போகுது மண் பிணைந்தபடி நனைந்து குழைந்த களி மண் நடமாடுது கையில் உயிராகி கற்பனைத் திறனுக்கு ஏற்றபடி களிமண் ஏற்கிறது உருவாகி உருண்டையாக பிடித்தால் உருண்டு ஓடியது பந்தாகி உருளையாக உரு நீண்டால் ஊர்ந்தது நெளிந்தது அரவமாகி கடவுள் உருவை அதில் பொறித்தார் கருணை பொழிந்தது அருள் ஓங்கி தாயுடன் சேயை புனைந்து எடுத்தார் பாசம் தெரித்தது உணர்வாகி அரிமாவை அதில் வடித்தார் கர்ஜனை ஒலித்தது சினமாகி வண்ண மயில் அதில் வடித்தார் கருத்தில் நிறைந்தது வண்ண சிறகாடி குழந்தை உள்ளம் யாவையும் குயவன் கையின் களிமண்ணே அதில் நல்ல உருவம் வடித்திடுவோம் நாளை உலகுக்கு அவர் நாடி ,,,,,,,     கோ.குமார் MA B.ED 

Comments

Popular posts from this blog

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்