செல்லகண்ணே கண்மணியே செல்லகண்ணே கண்மணியே

   




செல்லகண்ணே!! கண்மணியே.. 
பனிக்குடக் குளத்தில் 
தவழும் குலக்கொழுந்தே!! 

அதுவரையில் அருந்தாத உணவும் 
திகட்டும் உணவும் உட்செல்லும் . 
என் குழந்தையின் ஊட்டத்திற்கு.. 

வெளியேற்றிய பின்னும் , துவண்ட போதும் 
நீ உணவு பந்தை எட்டி தள்ளுவதாய் 
நினைத்து உண்ண தோன்றும் .. 

பார்த்து பார்த்து நானும் , அவரும் 
காத்து கிடக்கிறோம் .. என்று உன்னை 
எங்கள் கைகளில் ஏந்த போகிறோம் என .. 

Comments