ஜனநாயகமும் ஜனநாயகமயப்படுத்தலும்
ஆதி மனிதன் தனக்கு தேவையான விடயங்களை
தானாகவே உற்பத்தி செய்து வாழ்ந்தான். பின்னர் மனித தேவைகளும் விருப்பங்களும்
அதிகரித்துச் சென்றதன் காரணமாக மனிதன் ஏனையோருடன் இடைத்தொடர்புகளை ஏற்படுத்திக்
கொண்டான். மனிதனின் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு அரசு தேற்றம் பெற்றது.
இன்றைய அரசுகளில் ஜனநாயகம் மிகவும் முக்கிய ஒரு விடயமாக மாறியுள்ளது. ஜனநாயகம்
என்பது மக்கள் ஆட்சி என கூறலாம். ‘டிமொகிரசி’ என்ற சொல் கிரேக்க வார்த்தைகளிலிருந்து பெறப்படுகின்றது. ‘டிமோ’(DEMO) என்பது மக்கள்
என்பதையும் ‘கிரேசி’ (CRACY) என்பது இறைமை அல்லது அதிகாரம் என்பதையும் குறிக்கின்றது. ஜனநாயகம்
நேரடி ஜனநாயகம், மறைமுக ஜனநாயகம் 2
வகையாக பிரிக்கப்பட்டடுள்ளது.
ஜனநாயகமானது 3 முக்கிய விடயங்களை கொண்டுள்ளது. அவையாவன:-
1. சமத்துவம்
2. மக்கள் இறைமை
3. சுய ஆட்சி
என்பவையாகும். மக்கள் இறைமை என்பதன்
பொருள் யாதெனில் ஜனநாயகமானது ஒரு அரசியல் முறை என்பதும் அதில் மக்கள் தமக்குள்ள
அதிகாரத்தைத் தம்மைத் தாங்களே ஆளும் அளவுக்குச் செயற்படுத்தாது தம்மை ஆளுவோரை
மாற்றியமைக்கும் அளவுக்கே செயற்படுத்துகிறார்கள் என்பதுமேயாகும். ஜனநாயகம்
குறித்து அறிஞர்கள் பலவித வரைவிலக்கணங்களை கூறியுள்ளனர். அந்த வகையில் ‘ரூசோ’ குறிப்பிடுகையில்,
‘சமூக ஒப்பந்தத்தின் ஊடாக மக்களின் இறைமையை அரசு பெறுகின்றது.
அதனடிப்படையில் பெறும் ஆட்சியே ஜனநாயகம் எனப்படும்’ என குறிப்படுகின்றார்.
மேலும் இது குறித்து ‘அரிஸ்டோட்டில்’ குறிப்பிடுகையில்,
‘வழிதவறி இருந்த அதிகாரம் சிறப்பான வடிவத்தை பெற்றுக் கொண்டது’ என கூறுகின்றார்.
‘தோமஸ் ஸ்கூப்’
‘ஜனநாயகம் என்பது மக்களுடைய
மக்களுக்கான ஆட்சி’ என குறிப்படுகின்றார்.
ஜனநாயகம் சுதந்திரத்துடன்
சட்டத்துக்கான அவசியத்தையும் அதனை அமுலாக்குவதையும் இணைக்கப்படுவதற்கான ஒரு முயற்சியேயாகும்.
இது பெரும்பான்மையினரின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று ஓர்
உடன்பாடு அல்லது கட்டுப்பாடு இருப்பதாகவும் கருதுகிறது. மற்றும் அது
தனிப்பட்டவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் முயல்கின்றது. ஜனநாயகத்தை
கட்டியெழுப்பும் பல காரணிகளில் இனத்துவமும் இனத்துவ அடையாளங்களும், இன வேறுபாடுகளும்
மிகவும் முக்கிய விடயங்களாகும். ஜனநாயகம் சுதந்திரத்துடன் சட்டத்துக்கான
அவசியத்தையும் அதனை அமுலாக்குவதையும் இணைக்கப்படுவதற்கான ஒரு முயற்சியேயாகும்.
Comments
Post a Comment