வேல்முருகன், ‘வேல் மைதீன்’ ஆனது எப்படி? - மதுரை இளைஞரின் சாதனைக் கதை #MotivationStory
சி லர் எறும்பு கடித்தாலே துடிதுடித்துப் போய்விடுவார்கள்; கை, கால்களில் லேசாகக் கீறல் விழுந்தால்கூட பதற்றமாகிவிடுவார்கள். நம்மில் சாதாரண உடல் உபாதைகளுக்கே துவண்டுபோய் மூலையில் முடங்கிவிடும் மனிதர்கள் அநேகம் பேர். எப்பேர்ப்பட்ட இடர் வந்தாலும் தாங்கிக்கொண்டு, வாழ்க்கையை அதன் போக்கில் வாழும், தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் போய்க்கொண்டே இருப்பவர்கள்தான் சாதனையாளர்களாகத் தனித்துத் தெரிகிறார்கள். மதுரை மாவட்டம், பரவையைச் சேர்ந்த இளைஞர் வேல் மைதீன் ஒரு சாதனையாளர். அவரை அப்படிக் குறிப்பிடுவதுதான் பொருத்தமாக இருக்கும். சரி... யார் இந்த வேல் மைதீன், இவர் கதை என்ன? வேல் மைதீன்... பட்டதாரி. ஒரு விபத்தில் வலது கை மணிக்கட்டுக்குக் கீழே இருக்கும் பகுதியைப் பறிகொடுத்தவர். ஆனால், மனம் மட்டும் துவளவில்லை. விபத்தால் மாற்றுத்திறனாளியாகவே உருமாறிவிட்டாலும், வாழ்க்கையின் மீதான பிடிப்புக் கொஞ்சம்கூடக் குறையவில்லை. மண்பாண்டங்கள் தயாரிப்பு, அவரின் பரம்பரைத் தொழில். ஒறைக்கையால் மண்பாண்டப் பொருள்களைத் தயாரித்து விற்பனைக்கு அனுப்புகிறார். இப்போது கார்த்திகை தீபம் நெருங்குவதால், அகல்விளக்குத் தயாரிப்பில் தீவ...