Posts

99 ரூபாய்க்கு விமானச் சேவை!

Image
ஏர் ஏசியா விமான நிறுவனம் 99 ரூபாய்க்குவிமானச் சேவை என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.ஏர் ஏசியா விமான நிறுவனம் இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சேவைகளை வழங்கிவருகிறது.   உள்நாட்டுச் சேவையை ஊக்குவிக்கும்விதமாக இந்நிறுவனம் 99 ரூபாய்க்கு விமானச் சேவை என்ற ஊக்குவிப்பு அடிப்படையிலான திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவின் ஏழு நகரங்களுக்குப் பயணிக்கலாம் என்று ஏர் ஏசியா அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “99 ரூபாய் என்ற குறைந்தபட்ச கட்டணத்தில் இந்தியாவின் பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, கொல்கத்தா, புதுடெல்லி, புனே, ராஞ்சி ஆகிய ஏழுநகரங்களுக்கு ஊக்குவிப்பு அடிப்படையில் விமானச் சேவை வழங்கப்படுகிறது. இந்த விமானச் சேவை ஜனவரி 15 முதல் 31 வரை வழங்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஜனவரி 14 முதல் 21 வரை நடைபெறுகிறது” என்று தெரிவித்துள்ளது.

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் , கற்றல் திறனில் பின்தங்கியுள்ளதற்க்கு கற்றல் குறைபாடு நோய் (Learning disorder's) என்று பெயர் - மருத்துவக்கல்வித்துறையின்

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் , கற்றல் திறனில் பின்தங்கியுள்ளதை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் சில மாவட்டங்களின் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு memo,17a,17b , 17e (suspension ) வரை கிடைத்துள்ளது.        இதற்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்க்கலாகாது , மாணவர்கள் இவ்வாறு இருப்பதற்கு கற்றல் குறைபாட்டு நோய் (Learning disorders) என்று மருத்துவக்கல்வித்துறை இடமிருந்து RTI மூலம் எழுத்துப்பூர்வமாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.          இந்த மருத்துவதுறையின் கடிதத்தை எங்குவேண்டுமானாலும் (நீதிமன்றம் மற்றும் கல்வித்துறை ) ஆதாரமாக முன்வையுங்கள்...       தகவல்கள் பெறுவதற்கு பேருதவி புரிந்த மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் மற்றும் சட்ட ஆலோசனைகள் வழங்கிய மூத்த வழக்குரைஞர் மதுரை லஜபதிராய் ஐயா அவர்களுக்கும் நன்றிகள் பல.

எம.எல்.ஏ-மந்திரிகளின் குழந்தைகள் கட்டாயம் அரசுப் பள்ளியில் படிங்க வேண்டும்.

Image

நீதிமன்ற உத்தரவால் தேர்ச்சி பெற்றவர்எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு: கணக்கெடுக்கிறது ஆசிரியர்தேர்வு வாரியம்

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் ‘வந்தே மாதரம்’ தொடர்பான கேள்விக்கு 2 விடைகளுக்கு மதிப்பெண் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரு மதிப்பெண் அதிகரித்தால் கூடுதலாக எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள்என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் கணக்கெடுத்து வருகிறது. தகுதித்தேர்வுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2013-ல் நடத்திய தேர்வில் தேசபக்திப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடல் முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டதுஎன்ற கேள்விக்கு சரியான விடையாக சமஸ்கிருதம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம்அறிவித்திருந்தது. இதை எதிர்த்து விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சரியான பதில் வங்க மொழிதான் என்று அவர் முறையிட்டார். இதையடுத்து வழக்கறிஞர் குழு ஒன்று மேற்கு வங்கத்துக்குச் சென்று ஆய்வுசெய்து வந்தது.இந்த வழக்கில் ஜூலையில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதி பதி எம்.வி.முரளிதரன், ‘வந்தே மாதரம்’ முதலில் வங்க மொழி யில் இயற்றப்பட்டுள்ளது. அதன்பிறகு சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது நேரடி ஆய்வில் தெரியவந்துள்ளது.எனவே, வங்கமொழி என்று சரியான விடையை அ

ஜனநாயகமும் ஜனநாயகமயப்படுத்தலும்

ஆதி மனிதன் தனக்கு தேவையான விடயங்களை தானாகவே உற்பத்தி செய்து வாழ்ந்தான். பின்னர் மனித தேவைகளும் விருப்பங்களும் அதிகரித்துச் சென்றதன் காரணமாக மனிதன் ஏனையோருடன் இடைத்தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டான். மனிதனின் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு அரசு தேற்றம் பெற்றது. இன்றைய அரசுகளில் ஜனநாயகம் மிகவும் முக்கிய ஒரு விடயமாக மாறியுள்ளது. ஜனநாயகம் என்பது மக்கள் ஆட்சி என கூறலாம். ‘ டிமொகிரசி ’ என்ற சொல் கிரேக்க வார்த்தைகளிலிருந்து பெறப்படுகின்றது. ‘ டிமோ ’(DEMO) என்பது மக்கள் என்பதையும் ‘ கிரேசி ’ (CRACY) என்பது இறைமை அல்லது அதிகாரம் என்பதையும் குறிக்கின்றது. ஜனநாயகம் நேரடி ஜனநாயகம் , மறைமுக ஜனநாயகம் 2 வகையாக பிரிக்கப்பட்டடுள்ளது. ஜனநாயகமானது 3 முக்கிய விடயங்களை கொண்டுள்ளது. அவையாவன:- 1. சமத்துவம் 2. மக்கள் இறைமை 3. சுய ஆட்சி என்பவையாகும். மக்கள் இறைமை என்பதன் பொருள் யாதெனில் ஜனநாயகமானது ஒரு அரசியல் முறை என்பதும் அதில் மக்கள் தமக்குள்ள அதிகாரத்தைத் தம்மைத் தாங்களே ஆளும் அளவுக்குச் செயற்படுத்தாது தம்மை ஆளுவோரை மாற்றியமைக்கும் அளவுக்கே செயற்படுத்துகிறார்கள் என்பதுமேயாகும். ஜனநாயகம் குற

Flash News : பேருந்து கட்டணம் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

புதிய பேருந்து கட்டணம் 20.1.18 முதல் அமல் - தமிழக அரசு * சாதாரண பேருந்து 10.கி.மீட்டருக்கு ரூ.5 ல் இருந்து ரூ.6 ஆக உயர்வு * விரைவு பேருந்து 30 கி.மீட்டருக்கு ரூ.17ஆக இருந்த கட்டணம் ரூ.24 ஆக உயர்வு * அதிநவீன சொகுசு பேருந்து 30 கி.மீட்டருக்கு 21 ரூபாயாக இருந்த கட்டணம் ரூ.33 ஆக உயர்வு * குளிர்சாதன பேருந்து 30 கி.மீட்டருக்கு ரூ.27ல் இருந்து ரூ.42 ஆக உயர்வு. #TNGovt | #BusFare | #BusFareHike